ADD

Friday, February 8, 2013

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புதிய வசதி.......

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு
பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து
பணம் பறிப்பது. பேங்க் கொள்ளை களை விட, இதில் தான் நிறைய பணம்
கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக
தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate செய்யப்படும்
சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer
Tune/Caller Tune, Wallpaper, SMS (Joke, Devotional மற்றும் பல) மற்றும்
பல இதில் வரும்.

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில்
வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த
Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.


தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு
Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி
நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல்
செய்யப்படும்.

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில்
Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு
வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து
பாருங்கள்.

அழைக்க வேண்டிய எண் - 155223

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.com/t31072-topic#ixzz2KIb4c2rO
Under Creative Commons License: Attribution

‘விஸ்வரூபம், கடல் உட்பட ரூ.1 கோடி மதிப்புள்ள புதுப்பட டி.வி.டி.க்கள் பறிமுதல் : 4 பேர் தூத்துக்குடியில் கைது

‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகத்தில் நேற்று
வெளியானது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் ‘விஸ்வரூபம்’
உள்ளிட்ட புதுப்படங்களின் திருட்டு டி.வி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக
திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன்
தலைமையில் தூத்துக்குடி மாநகர உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மாநகர
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தூத்துக்குடி நகரில் உள்ள கடைகளில்
அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது 5 கடைகளில் அனுமதியின்றி விற்பனைக்காக ஏராளமான திருட்டு
டி.வி.டி. கேசட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டி.வி.டி.
கேசட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் விஸ்வரூபம், கடல், டேவிட்,
கண்ணா லட்டு தின்ன ஆசையா, அம்புலி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட புதுப்பட
டி.வி.டி.க்களும், சில ஆபாச பட டி.வி.டி.க்களும் அடங்கும்.

இதுதொடர்பாக காஜா முகைதீன் (வயது 29), யாசர் அராபத் (27), சமீர் பாஷா
(21), பேச்சிமுத்து (31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது
கடைகளில் இருந்து கணினிகள், பென் டிரைவ்கள், 10 செல்போன்கள், 2 மோட்டார்
சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட டி.வி.டி.க்கள் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் என போலீசார் கூறினர்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.com/t31066-1-4#ixzz2KIXF1eIs
Under Creative Commons License: Attribution